உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்ஸ் நடைபாதை யார் வீட்டு சொத்து?; ஆளாளுக்கு ஆக்கிரமிப்பு நகரமைப்புத்துறை குறட்டை

ரேஸ்கோர்ஸ் நடைபாதை யார் வீட்டு சொத்து?; ஆளாளுக்கு ஆக்கிரமிப்பு நகரமைப்புத்துறை குறட்டை

கோவை: மாநகரின் முக்கிய வி.ஐ.பி.,கள் மிகுந்த, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்படும் வணிக கட்டடங்கள், 'பார்க்கிங்' வசதி இல்லாமல், ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து வருகின்றன. சாதாரண டீக்கடை நடத்துவோர் கூட, தங்கள் கடையின் மூன்று மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில், 2019ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று வணிக கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும். கட்டட நிறைவு சான்று இருந்தால்தான், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறமுடியும்.வரைபடங்களில் 'பார்க்கிங்' வசதிகளை காண்பித்து, அனுமதிபெறும் வணிக கட்டடங்கள் பல, அவ்வாறு வசதிகளை ஏற்படுத்துவதில்லை. மாறாக, கட்டடத்துக்கு வெளியே ரோட்டோரம், நடைபாதை உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து, வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், இஷ்டத்துக்கு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். இதனால், பாதசாரிகள் நடைபாதைக்கு பதிலாக, ரோட்டில் நடந்து சென்று விபத்துக்கு ஆளாகும் கொடுமை நடக்கிறது.காலை, மாலை நேரங்களில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும், 100க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்கின்றனர். இப்படியிருக்க, கட்டடத்தின் வெளியே கயிறு கட்டியும், இரும்பு சங்கிலி கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும் ஆக்கிரமிக்கின்றனர்.தங்களது சொந்த வாகனங்களையும், வாடிக்கையாளர் வாகனங்களையும் மட்டுமே நிறுத்த அனுமதிக்கும், வணிக கட்டட உரிமையாளர்கள், மீறி நிறுத்துவோரை செக்யூரிட்டிகள் கொண்டு பகிரங்கமாக மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து, பார்க்கிங் வசதி தேடி வாகன ஓட்டிகள் அலைவதையும் காணமுடிகிறது.ரேஸ்கோர்ஸ், 108 விநாயகர் கோவில் எதிரேயும், பல வணிக கட்டடங்கள் இப்படி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதை, கண்கூடாக காணமுடிகிறது. வி.ஐ.பி.,கள் மிகுந்த இப்பகுதியில், அரசியல் பின்புலம் கொண்டவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரையும் மிரட்டும் அவலம் காணப்படுகிறது.இதனால் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் பின்வாங்குகின்றனர். 'பார்க்கிங்'கே இல்லாமல் நிறைய வணிக கட்டடங்கள் இயங்கிவரும் நிலையில், ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்பது மாநகராட்சியின் பொறுப்பு. மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டபோது,''ரேஸ்கோர்ஸ் பகுதியில் விதிமீறல் வணிக கட்டடங்களில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMESH
ஏப் 30, 2025 22:22

துடியலூர் முதல் நரசிம்ம நாயக்கன் பாளையம் வரை ஏழை மக்கள் நடத்தி வந்த கடைகளை அப்புறப்படுத்திய அரசு ரேஸ்கோர்ஸ் நடை பாதை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Selvaraj P
ஏப் 30, 2025 10:20

ஆக்கிரமிப்பு செய்பவர்கள் தங்கள் அப்பா வீட்டுச்சொத்துபோல நினைத்து அனுபவித்து வருகிறார்கள் இதை அரசு அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே இதை‌ தடுக்க முடியும்


Shankar Karuppusamy
ஏப் 29, 2025 08:08

ம்... சரிதான் இது மாநகராட்சிக்கு தெரிந்து தானே நடை பெறுகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 28, 2025 07:24

? 1964-65முதல் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து அடாவடித்தனம் செய்வது துவங்கிவிட்டது. சென்னையில் பாரீஸ் கார்னர் பகுதியில் குறிப்பிட்ட ஜாதியினர் நடத்தும் ஹோட்டல்கள் முன்பு துவங்கியது இந்த கலாச்சாரம். பின் நடைபாதை முன்னேற்ற சங்கம் என்று போர்டு வைத்தார்கள். 1967க்குப்பின் சட்ட சபையில் இதைப்பற்றி கேட்டபோது அவர்களும் மனிதர்கள் பிழைக்க வேண்டாமா என்றுதான் பதில் சொன்னார்கள்


அப்பாவி
ஏப் 28, 2025 06:03

பாக்கி நடைபாதைகளெல்லாம் ஃப்ரீயா இருக்கற மாதிரி. இந்தியாவில் 99 சதவீதம் திருடனுங்க. யாரைக் கேட்பது?


சமீபத்திய செய்தி