உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மழை

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மழை

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், சாரல் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், கடந்த, 2 நாட்களாக, பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை, தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், வேடபட்டி, வடவள்ளி, மருதமலை பகுதிகளில், சாரல் மழை பெய்தது.சுமார், 20 நிமிடங்கள் மழை பெய்ததால், தொண்டாமுத்தூர் வட்டார பகுதி முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை