சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டியில் சதம் விளாசிய ரெயின்போ வீரர்
கோவை, ; இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் ரெயின்போ வீரர், 104 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உட்பட பல்வேறு மைதானங்களில் நடக்கிறது. ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.பேட்டிங் செய்த ரெயின்போ அணியினர், 50 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 262 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் சாதிக் அல் அமீன், 104 ரன்களும், ஹரிஹரன், 57 ரன்களும், நவீன் பிரபு, 31 ரன்களும் குவித்தனர்.தொடர்ந்து விளையாடிய ஜாலி ரோவர்ஸ் அணியினர், 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 135 ரன்கள் எடுத்தனர். வீரர் பகவான் ஸ்ரீ, 60 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் அப்துல் ஹக்கீம் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.