உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மழை பொழிவால் கொப்பரை வரத்து குறைவு

 மழை பொழிவால் கொப்பரை வரத்து குறைவு

நெகமம்: நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 87 ஆயிரம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடந்த ஏலத்தில், 597 கிலோ கொப்பரை, 87 ஆயிரத்து, 400 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், இரண்டாம் தர கொப்பரை குறைந்த பட்சமாக, 157 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 175 ரூபாய்க்கும் விற்பனையானது. ஏலத்தில், 11 விவசாயிகள் மற்றும் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கடந்த, நான்கு நாட்களாக மழை பெய்ததால், கொப்பரை வரவு குறைவாக இருந்தது. மேலும், ஏலத்தில், முதல் தர கொப்பரை வரத்து இல்லை. வரும் வாரங்களில் கொப்பரை வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை