மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
01-Sep-2024
கோவை: ராம்நகர் ராமர் கோவிலில், 'நிர்வாண ராமாயணம்' பகுதி -2 என்ற தலைப்பிலான ஆன்மிக சொற்பொழிவு இன்று துவங்கி, செப்.,22 வரை நடக்கிறது.ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீமத்அபிநவவித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை நடக்கிறது.நொச்சூர் ஆச்சார்யாள் என்றழைக்கப்படும் பூஜ்யஸ்ரீ ரமணசரண தீர்த்த ஸ்வாமிகள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இதில் பக்தர்கள் பங்கேற்று ராமபிரானின் அனுக்கிரஹத்தை பெற, ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
01-Sep-2024