உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு

 ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு

நெகமம்: நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் பயன்பாட்டிற்கு வளர்ச்சிப் பணிகள் அர்ப்பணிக்கப்பட்டது. நெகமம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ் வரசாமி பங்கேற்றார். மேலும், பேரூராட்சி தலைவர் ஆர்த்தி, கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், பொதுமக்கள் பங்கேற்றனர். நெகமம் பகுதியில் புதிய ரேஷன் கடை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் லேப் மற்றும் ரங்கம்புதூரில் குடிநீர் தொட்டி ஆகியவை திறக்கப் பட்டது. காளியப்பன்பாளையத்தில் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் கே.கே., நகரில் சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை