உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடி விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்

கோடி விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்

கோவை : உலக நலனுக்காக கோடிமுறை விஷ்ணு சஹஸ்ரநாமத்தை, பக்தர்கள் பாராயணம் செய்தனர்.அனைவரது ஆரோக்கியத்திற்கும், சவுபாக்கியத்திற்கும், செல்வசெழிப்பிற்கும், உலக நலன் கருதி விஷ்ணு சஹஸ்ரநாம கமிட்டி சார்பில், கோடி விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நேற்று நடந்தது. கோவை தடாகம் சாலையிலுள்ள, இடையர்பாளையம் வி.ஆர்.ஜி., திருமண மஹாலில் காலை 6:00 மணிக்கு கணபதிஹோமத்துடன் துவங்கியது. ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சுமார் 1,700 பேர் பங்கேற்று தொடர்ந்து கோடிமுறை விஷ்ணு நாமத்தை பாராயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை