மேலும் செய்திகள்
ஸ்ரீ ராமகிருஷ்ணாவுக்கு சிறந்த மருத்துவமனை விருது
05-May-2025
கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், விழிப்புணர்வு 'ரீல்ஸ்' வெளியிடப்பட்டது. கலெக்டர் பவன்குமார் ரீல்ஸ் வெளியிட்டார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் குகன் கூறியதாவது:இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 30 ரீல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகையில், 20 - 25 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்கள். இதில், 30 - 40 சதவீதம் பேர் இளைஞர்கள். புகையிலையில் 400க்கும் அதிகமான வேதி பொருட்கள் உள்ளன. அதில் 40 முதல் 50 வேதிப்பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படவும், புகையிலை ஒரு முக்கிய காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். தலைமை செயல் அலுவலர் ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
05-May-2025