உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதிவு தபால் சேவை நடைமுறையில் இருக்கு

பதிவு தபால் சேவை நடைமுறையில் இருக்கு

கோவை: தற்போது நடைமுறையில் இருக்கும் பதிவு தபால் சேவை, அக்., 1 முதல் விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படுகிறது. பல இடங்களில் தற்போதே பதிவு தபால் முன்பதிவு செய்ய மறுப்பதால், போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என, தபால் துறைக்கு வலியுறுத்தப்பட்டது. தபால் செயல்பாட்டு பிரிவு சார்பில், உதவி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சில பகுதிகளில் உள்ள தபால் துறை கவுன்டர்களில், பதிவு தபால் முன்பதிவு செய்ய மறுப்பதாக, தபால் இயக்குனரக கவனத்துக்கு வந்தது. இது மிகவும் ஆட்சேபனைக்குரியது. பதிவு தபால் முன்பதிவு, இதுவரை செயல்பாட்டில் உள்ளது; தற்போது வரை நிறுத்தப்படவில்லை என்பது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. பதிவு தபால் சேவை, விரைவு தபால் சேவையுடன், அக்.1 முதல் இணைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை