உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  படகு இல்லத்தில் இருந்த ஆகாயத்தாமரை அகற்றம்

 படகு இல்லத்தில் இருந்த ஆகாயத்தாமரை அகற்றம்

வால்பாறை: வால்பாறை படகுஇல்லத்தில் நீர்ப்பரப்பை ஆக்கிரமித்து இருந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடக்கிறது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்கு வசதிக்காக, நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. படகு இல்லத்தில் கழிவு நீர் தேங்கியதால், கடந்த சில மாதங்களாக படகுசவாரி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது படகு இல்லம் துார்வாரப்பட்டு, படகுசவாரி செல்ல இடையூறாக உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியும் தற்போது நடக்கிறது. நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்கு வசதிக்காக, படகுஇல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. முதல் கட்டமாக படகுசவாரி செல்ல இடையூறாக உள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி நடக்கிறது. அதன்பின், சேதமடைந்த நடைமேடை சீரமைக்கப்படும். கார் பார்க்கிங் செய்ய வசதியாக பூங்காவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும். பணிகள் நிறைவடைந்த பின் படகுசவாரி வழக்கம் போல் இயக்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி