| ADDED : நவ 24, 2025 06:29 AM
கோவை: கோவை அரசு கலைக்கல்லுாரி ரோடு, நீதிமன்றம் அருகில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல் பீப்பிள்ஸ் பார்க் கிளை முழுமையாக புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கிளையின் முதல் விற்பனையை வி.கே.எஸ்.,ஐயர் அண்டு கோ நிறுவனத்தின் ஆடிட்டர் சத்யநாராயணன் துவக்கி வைத்தார். அரசு கலைக்கல்லுாரி ரோட்டில், 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கிளை, ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல் கிளைகளில் தனித்துவமான கிளையாகும். இப்போது நவீன உள்கட்டமைப்பு அலங்காரத்துடன் சிறந்த முறையில் முழுமையாக புதுபிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையின் திறப்பு விழாவில், அன்னபூர்ணா குழுமத் தின் தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் தாமோதரசாமி, மற்றும் இயக்குநர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கிளை மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.