உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அளிக்க கோரிக்கை

சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அளிக்க கோரிக்கை

கோவை; மதுக்கரை மரப்பாலம் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் கிராம மக்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது: கோவையில் மதுக்கரை மரப்பாலம் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமலையம்பாளையம், எட்டிமடை, காளியாபுரம், ரொட்டி கவுண்டனுார், க.க.சாவடி, பிச்சனுார், வீரப்பனுார், நவக்கரை, சின்னாம்பதி, மாவுத்தம்பதி, உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் மற்றும் கோவைக்கு வாகனங்களில் சென்று வந்த மக்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுக்கரை சுங்கச்சாவடியை கடந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு டோல்கேட் இருப்பதால், சுங்க கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. விவசாயிகளும், கிராம மக்களும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த சிரமப்படுகின்றனர். பால வேலை முடிவடைந்து, போக்குவரத்துக்கு திறந்து விடும் வரை, நெடுஞ்சாலையில் உள்ளூர் மக்களுக்கு, கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !