உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலை விரிவாக்க பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

 சாலை விரிவாக்க பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து, அவிநாசி வரை, 38 கிலோமீட்டர் தூரம், இருவழி சாலையாக உள்ளது. அவிநாசி, அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊட்டி செல்கின்றன. இதனால் அன்னூர், மேட்டுப்பாளையத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. சீரடைய இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவிநாசி சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய, 115 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. விரிவாக்க பணிகள் நடக்கின்றன. ஆனால் தடுப்புகள் வைக்காமல் நடப்பதால் விபத்து நடக்கிறது. மேட்டுப்பாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், “நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பாதுகாப்பு தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ