உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சைகை மொழிபெயர்ப்பாளர்  தேவை கோவை கலெக்டரிடம் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சைகை மொழிபெயர்ப்பாளர்  தேவை கோவை கலெக்டரிடம் கோரிக்கை

கோவை : அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாவட்ட சிறப்புக்கிளை சார்பில், கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் தலைமையில் நடந்தது. இதில், கலெக்டரிடம் சமர்ப்பித்த மனுக்கள் வருமாறு:l தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர், மாவட்ட சிறப்பு கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசில் அடித்தும், செய்கை செய்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், 'காது கேளாதோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக 6,000 ரூபாய் வழங்க வேண்டும், அரசு வேலையில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள் பொது இடங்களில், சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து காது கேளாதோர், வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினர். l கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், டிரைவர்களுக்கு வழங்கிய சம்பளத்தில் 36.43 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக, கோயம்புத்தூர் லேபர் யூனியன் செயலாளர் செல்வராஜ், மனு சமர்ப்பித்தார்.l கோவை வாடகை வீடு குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீடு கட்டித்தர, கோரி மனு அளித்தனர். l கணபதிமாநகரில் உள்ள கிறிஸ்துராஜ் நகரில், இரண்டு நபர்கள் 20 அடி சாலையின் பெரும்பான்மையான பகுதியை ஆக்கிரமித்து, வீட்டுப்படிக்கட்டுகளையும் சுற்றுச்சுவரையும் அமைத்துள்ளது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இது போல், ஏராளமானோர் கலெக்டரிடம் மனு சமர்ப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ