உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த கோரிக்கை

ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த கோரிக்கை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ., தாமோதரன் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், வசதிகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. அடிப்படை வசதிகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டாலும், நடைமேடை போன்ற வசதிகள் குறைவாகவே உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில், தேவையான வசதிகளை ஏற்படுத்தி மேம்படுத்த வலியுறுத்தி கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ரயிலின் நீளத்திற்கு ஏற்ப பிளாட்பார்ம் நீளத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். இத்துடன் பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ரயில்வே ஸ்டேஷன் பின்புறத்தில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். இங்கு ரோடு அமைந்தால், கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் இருந்து எளிதாக பஸ் பயணம் செய்யலாம். பொதுமக்கள் வருகை அதிகரிக்கும். இத்துடன் இவ்வழியில் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்கலாம். எனவே, பயணியர் நலன் கருதி பிளாட்பார்ம் நீட்டிப்பு, ரோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை