உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயன்பாடின்றி சோலார் டிஜிட்டல் பேனல் சீரமைக்க கோரிக்கை

பயன்பாடின்றி சோலார் டிஜிட்டல் பேனல் சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி -- வால்பாறை ரோடு, மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில், பயன்பாடின்றி காணப்படும் சோலார் டிஜிட்டல் பேனலை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி --- வால்பாறை ரோட்டில், ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து, 40 கொண்டை ஊசி வளைவுகளை உள்ளடக்கி மலைப்பாதை உள்ளது. அதிகப்படியான வாகனங்கள், இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், விபத்து கண்டறியப்பட்ட கொண்டை ஊசி வளைவுகளில் வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்ய எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, நான்கு கொண்டை ஊசி வளைவுகளில், கீழ் மற்றும் மேல் பகுதியில், வாகனங்கள் எதிரெதிரே வருவதை தெரிந்து கொள்ளும் வகையில், அதிக திறன் கொண்ட சோலார் டிஜிட்டல் பேனல் வைக்கப்பட்டது.இவை ஒன்றுடன் ஒன்று, சென்சார் வாயிலாக இணைக்கப்பட்டது. கீழ் இருந்தோ, மேல் இருந்தோ வாகனங்கள் சென்சார் பகுதியைக் கடந்தால், அந்த தகவல் அறிவிப்பு பலகையில் வெளியாகும்.குறிப்பாக, 'மேல்நோக்கி வாகனம் வருகிறது' என்ற தகவல் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளில் குறிப்பிடப்படும். அதனை கீழ்நோக்கி வரும் ஓட்டுநர்கள் பார்த்து, 'அலர்ட்' ஆகி, வாகனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால், மேல்நோக்கி செல்லும் வாகனங்கள், எளிதாக வளைவைக் கடந்து செல்லும் என்பதால் விபத்துகள் குறையும்.ஆனால், அந்த சோலார் டிஜிட்டல் பேனல் தற்போது, பயன்பாடின்றி காணப்படுகிறது. சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க அமைக்கப்பட்ட டிஜிட்டல் அறிவிப்பு பலகையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக, மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கவும், அவர்கள் பாதுகாப்புகாகவும், டிஜிட்டல் அறிவிப்பு பலகையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை