உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

உடுமலை, - உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை வழியாக, தினமும் கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நுாற்றுக்கணக்கான ரயில் பயணியர் இவற்றில் பயணம் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ