உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டோக்கன் முறையை நிறுத்த கோரிக்கை

டோக்கன் முறையை நிறுத்த கோரிக்கை

கோவை; பொங்கல் பரிசு பொருள் வழங்க ரேஷன் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் முறையை கைவிட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நேரங்களில், பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். அவர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் முறையை கைவிட வேண்டும்.ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில், பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்களை முழுமையாக சப்ளை செய்ய வேண்டும். அட்டைதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பொங்கல் இலவச வேட்டி சேலை நகர்வு செய்யப்படுவதை, கள அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.பி.ஓ.எஸ்., கருவி சீரான முறையில், சர்வர் கோளாறுகள் இல்லாமல் இயங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு இடவேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ