உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பாலத்தில் இறங்குதளம் முதல்வருக்கு கோரிக்கை

மேம்பாலத்தில் இறங்குதளம் முதல்வருக்கு கோரிக்கை

சூலுார் : பட்டணம் கிராமத்துக்கு செல்ல, மேம்பாலத்தில் இருந்து இறங்கு தளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஒன்றிய கவுன்சிலர் முதுல்வருக்கு மனு அனுப்பி உள்ளார். சூலுார் ஒன்றிய கவுன்சிலர் ரகு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்: பட்டணம் ஊராட்சியில், 35 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் இருந்து பட்டணம் செல்ல காமாட்சி புரம், இருகூர் பிரிவு அல்லது சிந்தாமணிப்புதூர் பை - பாஸ் சிக்னல் சென்று திரும்பி வர வேண்டி உள்ளது. இதனால், மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். அதனால், ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் இருந்து சுற்றுப்பாதை அல்லது இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே தற்போதும் குடிநீர் வழங்கப்படுகிறது. அதனால், தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளையை அதிகரித்து தர வேண்டும்.பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை