உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒற்றை யானையால் குடியிருப்பு சேதம்

ஒற்றை யானையால் குடியிருப்பு சேதம்

வால்பாறை; சோலையாறு எஸ்டேட்டில், வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானையை தொழிலாளர்கள் வனத்துக்குள் விரட்டினர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட். இங்குள்ள குருவம்பாடி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு வந்த ஒற்றை யானை, பலா மரத்தில் இருந்து காய்களை உட்கொண்டது.அதன்பின், எஸ்டேட் மேற்பார்வையாளர் ராமர் வீட்டின் பின்புறத்தில் உள்ள சமையல் அறையை சேதப்படுத்தியது. சப்தம் கேட்டு வெளியில் வந்த தொழிலாளர்கள் யானையை விரட்டினர். நீண்ட இடைவெளிக்கு பின், எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் வந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகே, தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை