மேலும் செய்திகள்
குமாரசாமிக்கு நில ஆவணங்கள் வழங்க உத்தரவு
09-Apr-2025
சூலுார் : சூலுாரில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. சூலுார் மார்க்கெட் ரோட்டில், தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள, 10 சென்ட் இடம் குறித்து பல ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வந்தது. தங்களுக்கு சொந்தமானது என, இரு வேறு தரப்பினர் கூறி வந்தனர். இதுதொடர்பாக, பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இரு தரப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு. இறுதியில் அரசு ஆவணங்கள் படி அந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என, முடிவானது. இதையடுத்து, அப்பகுதியில், 'வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம். ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது' என, அறிவிப்பு பலகையை வருவாய்த்துறையினர் வைத்தனர்.
09-Apr-2025