உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனை கூடத்தில் கம்பு ஏலம்

விற்பனை கூடத்தில் கம்பு ஏலம்

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், சூரியகாந்தி விதை, கம்பு, மக்காச்சோளம் ஏலம் நடந்தது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், விவசாய விளை பொருட்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், உடுமலை பகுதியைச்சேர்ந்த, 3 விவசாயிகளின், 7 ஆயிரத்து 55 கிலோ சூரிய காந்தி விதை ஏலத்திற்கு வைக்கப்பட்டது. இதில், ஒரு கிலோ ரூ.52க்கு விற்பனையானது.அதே போல், 3 விவசாயிகளின், 6,186 கிலோ கம்பு ஏலத்திற்கு வைக்கப்பட்டதில், ஒரு கிலோ ரூ.22.90க்கு விற்பனையானது. மக்காச்சோளம், 5 விவசாயிகள், 6,149 கிலோ, இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலத்தில் வைக்கப்பட்ட நிலையில், அதிக பட்சமாக கிலோ, ரூ.23.75க்கு விற்பனையானது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விவசாய விளை பொருட்களை தரம் பிரித்து, உலர வைத்து விற்பனை செய்யும் வகையில், உலர் களங்கள் வசதியும், விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில், குடோன் வசதியும் உள்ளது.விவசாயிகள் விளை பொருட்களை உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, உலர வைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து பயன்பெறுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை