ரோடு சீரமைப்பு பணி துவங்கியது
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து, சொலவம்பாளையம் செல்லும் ரோடு வரை, சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது.கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து, சொலவம்பாளையம் செல்லும் ரோடு 500 மீட்டர் தூரத்துக்கு, ஆங்காங்கே சேதமடைந்து இருந்தது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.மேலும், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி சென்று வந்தனர். குறிப்பாக, மழை காலத்தில் ரோட்டில் உள்ள குழி அளவு தெரியாத அளவுக்கு, மழை நீர் தேங்கி நிற்பதால், பைக் ஓட்டுநர்கள் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகினர்.தற்போது, இந்த ரோடு, 523 மீட்டர் தூரத்துக்கு, 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.