உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.பொள்ளாச்சி போக்குவரத்து துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் துவக்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் முன்னிலை வகித்தனர்.மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே துவங்கிய பேரணி, காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவை ரோடு ஆய்வு மாளிகை அருகே நிறைவடைந்தது.பேரணியில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகையை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சேகர், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி