சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவை; கோவை மாநகர போலீஸின், 35ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, 5 கி.மீ., விழிப்புணர்வு பேரணி நடந்தது.கோவை மாநகர காவல் துறை, 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன், 35 ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான பேச்சு போட்டி, பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு கிரிக்கெட் போட்டி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.நேற்று காலை 7:00 மணிக்கு, மாநகர போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வாக்கத்தான் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ரேஸ்கோர்ஸ் வழியாக, போலீஸ் பயிற்சி பள்ளி வரை, 5 கி.மீ., நடந்தது.