உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

பொள்ளாச்சி; ரோட்டரி கிளப் ஆப் பொள்ளாச்சியின், 41வது பதவியேற்பு விழா, ரோட்டரி சமூக மையத்தில் நடந்தது. 2025 - 26ம் ஆண்டுக்கான நிர்வாகத்தில் சதீஷ் சந்திரன் தலைவராகவும், ஸ்ரீகாந்த் வெங்கட் செயலாளராகவும் பதவியேற்றனர்.என்.ஜி.எம்., கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தன்னலமற்ற சேவையின் பண்பு குறித்து பேசினார்.ஜவரிலால் ஜெயின் பங்கேற்று, சமூக சேவை மற்றும் வசதியற்றோருக்கான உதவியின் அவசியம் குறித்து பேசினார்.ரோட்டரி முன்னாள் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள், மாவட்ட ரோட்டரி அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.2025 -26ம் ஆண்டுக்கான சேவை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.போதை விழிப்புணர்வு, பழங்குடியின நலன், மகிழ்ச்சி பள்ளி, பெண்கள் மேம்பாடு, போக்குவரத்து விழிப்புணர்வு, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, பொது இடங்களில் கழிவு அகற்றுதல் உள்ளிட்ட தலைப்புகளில் சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை