உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இதய மாற்று அறுவை சிகிச்சையில் ராயல்கேர்  மருத்துவமனை சாதனை

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ராயல்கேர்  மருத்துவமனை சாதனை

கோவை; நீலாம்பூர், ராயல்கேர் மருத்துவமனையில் முதல்முறையாக, இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில், இருதய மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரதீப், இருதய சிகிச்சை மயக்கவியல் ஆலோசகர் டாக்டர் கிருபானந்த் ஆகியோர், சிகிச்சையை குறுகிய நேரத்தில் சிறப்பாக செய்து முடித்தனர். கே.ஜி.மருத்துவமனையில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள நீலாம்பூர் ராயல்கேர் மருத்துவமனைக்கு, கோவை காவல்துறை சார்பில் பசுமை வழி அமைத்துக் கொடுத்தது, 12 நிமிடங்களில் இதயத்தை எடுத்துச் செல்ல உதவியாக இருந்தது. டாக்டர் மாதேஸ்வரன் கூறுகையில், ''ராயல்கேர் மருத்துவ வரலாற்றில், இது ஒரு முக்கிய மைல்கல். பல உடல் உறுப்புகள், மாற்று அறுவை சிகிச்சை வசதியுள்ள இம்மருத்துவமனையில், முதன்முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை