மேலும் செய்திகள்
வீட்டு பூட்டை உடைத்து 22 பவுன் கொள்ளை
20-Aug-2025
23 சவரன் நகைகள் திருட்டு
28-Aug-2025
அன்னுார்; அன்னுாரில் வீட்டு கதவை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அன்னுார், அழகாபுரி நகரை சேர்ந்தவர் ரத்தினசாமி, 46. பைனான்ஸ் அதிபர். இவர் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், முக்கால் சவரன் கம்மல், அரைப்பவுன் மோதிரம் ஆகியவை திருட்டுப் போயிருந்தன. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
20-Aug-2025
28-Aug-2025