உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை தடகள வீராங்கனைக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை

கோவை தடகள வீராங்கனைக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை

கோவை; சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாணவிக்கு ரூ.6,000 ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், சங்கம் சார்பில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தலா நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் தோறும் ரூ.6,000 வீதம் ஓராண்டுக்கு ஊட்டச்சத்து தேவைக்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இப்போட்டியில், 20 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த திவ்யஸ்ரீ சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, கோவை நேரு ஸ்டேடியத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் அதற்கான காசோலையை வழங்கினார். தடகள சங்கத்தின் செயலாளர் சம்சுதீன், தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ