உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மருதமலை உண்டியலில் ரூ.84.48 லட்சம் காணிக்கை

 மருதமலை உண்டியலில் ரூ.84.48 லட்சம் காணிக்கை

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 80,02,563 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 1,29,489 ரூபாயும்; கோசாலை உண்டியலில், 3,16,435 என, மொத்தம், 84,48,487 ரூபாய் இருந்தது. அதோடு, 43 கிராம் 100 மி.கி., தங்கமும்; 6 கிலோ 811 கிராம் வெள்ளியும்; 18 கிலோ 175 கிராம் பித்தளையும் இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் செந்தில்குமார், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செயல் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை