உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ. ஒரு லட்சம் பறிமுதல்

ரூ. ஒரு லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம்;காரமடை -தோலம்பாளையம் சாலையில் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸ் எஸ்.ஐ., சுரேந்தர் தலைமையிலான பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 52, என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 500 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்