உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 40 ஆண்டுக்கு பிறகு சாலைகளுக்கு விமோசனம்

40 ஆண்டுக்கு பிறகு சாலைகளுக்கு விமோசனம்

போத்தனூர்; கோவை சுந்தராபுரம் அடுத்து, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2ல், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பிரதான சாலை தவிர்த்து, 44 குறுக்கு சாலைகள், 20 அடி அகலத்தில் உள்ளன. இப்பகுதி உருவாகி. 40 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், சாலைகள் மோசமான நிலையில் காணப்பட்டன.இதனை சீரமைத்து தர, இப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். பஸ் வந்து, செல்லும் பிரதான சாலை மட்டும், ஓராண்டுக்கு முன் சீரமைக்கப்பட்டது. இவ்வார்டின் தி.மு.க., செயலாளர் மகாலிங்கம், தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சாலையை முழுமையாக தோண்டி எடுத்து, புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.வார்டு செயலாளர் மகாலிங்கம் கூறுகையில்,இங்குள்ள சாலைகள், 40 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் சீரமைக்கப்படுகிறது. ''சாலையின் ஓரத்திலுள்ள எந்தவொரு மரமும் வெட்டப்படவில்லை. வீடுகளின் முன் உள்ள ஆக்கிரமிப்பு, முழுமையாக அகற்றப்படுகிறது. 1.41 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணி நடக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை