உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வு; பங்கேற்ற மாணவருக்கு பாராட்டு

செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வு; பங்கேற்ற மாணவருக்கு பாராட்டு

பெ.நா.பாளையம்; செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வில் பங்கேற்ற இடிகரை கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. கோவை கிரேயான்ஸ் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளியை சேர்ந்த பிளஸ், 2 மாணவர் தவனேஷ், இந்திய விண்வெளி ஆய்வகமான இஸ்ரோவுக்கு நேரில் சென்று, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்த நாசா மற்றும் இஸ்ரோ இணைந்த நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பு பெற்றார். மாணவருக்கான பாராட்டு விழா கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் தீபா நந்தினி, நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், இஸ்ரோவில் தனது அனுபவங்களை மாணவர் தவனேஷ் கூறுகையில்,' இஸ்ரோவில் பெற்ற அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. விஞ்ஞானம் மற்றும் விண்வெளி குறித்து அறிந்து கொள்ள உதவியது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை