உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சேர்க்கையை அதிகரிக்க களமிறங்கிய பள்ளி ஆசிரியர்கள்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க களமிறங்கிய பள்ளி ஆசிரியர்கள்

வால்பாறை, ; வால்பாறையில் உள்ள, அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டம், வால்பாறை தாலுகாவில், 53 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம், 85 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.வால்பாறையில் உள்ள, துவக்கப்பள்ளிகளில் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை சேர்க்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், ஆசிரியர்கள் வீடு தேடி சென்று, அரசு பள்ளியின் சிறப்புகளை தெரிவிக்கின்றனர்.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:வால்பாறையில், எஸ்டேட் பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், துவக்கப்பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. ஆனால், வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் துவக்க கல்வி கற்க ஆர்வத்துடன் வருகின்றனர். அவர்களும் நிரந்தரமாக இங்கு இருப்பதில்லை. இதனால் தான் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முடியவில்லை.இவ்வாறு, கூறினர்.வால்பாறை வட்டார கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் கேட்ட போது, ''அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ