காந்திமாநகர் பூங்காவில் இருக்கை திறப்பு
கோவை; மறைந்த சமூக சேவகர் பாலன் நினைவாக, காந்திமாநகர் மாநகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்ட கான்கிரீட் இருக்கைகளை, மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலர் தவமணி பழனியப்பன் நேற்று திறந்து வைத்தார். பல ஆண்டுகளாக நாள் தவறாமல், பூங்காவுக்கு வந்து சுத்தம் செய்து, மரங்கள், செடிகளுக்கு தண்ணீர் விட்டு, பராமரிப்புக்கு உதவிய பாலனின் சேவையை, பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நினைவுகூர்ந்தனர். பாலன் மனைவி ஹேமாவதியும், தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.