மேலும் செய்திகள்
மாநில கூடைப்பந்து; திறமை காட்டியது கோவை அணி
08-Oct-2025
கோவை: கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், 'சீனியர் ஹாக்கி லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., டெக்., மைதானத்தில் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், 18க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. மாருதி கல்லுாரி(எம்.சி.பி.இ.,) ஹாக்கி கிளப்(எச்.சி.,) அணியும், கே.சி.டி., அணியும் மோதின. இதில், 6-0 என்ற கோல் கணக்கில், எம்.சி.பி.இ., அணி வென்றது. தொடர்ந்து, சுகுணா எச்.சி., அணி, 2-0 என்ற கோல் கணக்கில் யு.ஐ.டி., எச்.சி., அணியையும், சுகுணா அணி, 2-0 என்ற கோல்களில், கே.சி.டி., அணியையும் வென்றன. எம்.சி.பி.இ., அணி, 7-0 என்ற கோல்களில் யு.ஐ.டி., ஹாக்கி கிளப் அணியையும், பிளேஸ் எச்.சி., அணி, 4-1 என்ற கோல்களில் சி.எச்.சி., அணியையும், பி.பி.ஜி., அணி, 2-0 என்ற கோல்களில் கே.ஜி., அணியையும், காருண்யா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 16-0 என்ற கோல்களில், எச்.ஐ.டி., எச்.சி., அணியையும் வெற்றி கொண்டன. பி.எஸ்.ஜி., கேஸ் எச்.சி., அணி, 9-0 என்ற கோல்களில் பிளேஸ் அணியையும், யு.ஐ.டி., அணி, 2-1 என்ற கோல்களில் கே.சி.டி., அணியையும், எம்.சி.பி.இ., அணி, 3-0 என்ற கோல்களில், சுகுணா அணியையும் வென்றன. பி.எஸ்.ஜி., டெக்., அணி 'டை பிரேக்கர்' முறையில், 4-2 என்ற கோல் கணக்கில், போத்தனுார் அணியை வென்றது. காருண்யா அணி, 3-0 என்ற கோல்களில் கே.ஜி., கேஸ் எச்.சி., அணியையும், பி.பி.ஜி., எச்.சி., அணி, 5-1 என்ற கோல்களில் எச்.ஐ.டி., எச்.சி., அணியையும் வென்றன. எஸ்.எஸ்.ஐ.இ.டி., எச்.சி., அணி, 2-0 என்ற கோல்களில் எச்.ஐ.சி.இ.டி., அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
08-Oct-2025