| ADDED : ஜன 26, 2024 11:13 PM
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் தைப்பூச தேரோட்ட விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, தைப்பூச தேரோட்ட விழா, கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் வள்ளியம்மை திருக்கல்யாணம் நடந்தது.நேற்று மாலை 5:00 மணிக்கு, விநாயகர் தேர் மற்றும் முருகப்பெருமான் திருத்தேர்களை, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.இதேபோல், செஞ் சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்.