உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணியில் வேண்டும் தியாக உணர்வு சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., பேச்சு

பணியில் வேண்டும் தியாக உணர்வு சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., பேச்சு

பெ.நா.பாளையம்:''தியாக உணர்வுடன், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பணியாற்ற வேண்டும்,'' என, கோவை சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரி முதல்வர் ஐ.ஜி., அஜய் பரதன் பேசினார்.ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெற்ற, 45 வயதுக்கு உட்பட்ட, 57 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 12 வார பயிற்சி, துடியலுார் கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரியில் அளிக்கப்பட்டது. இவர்கள், ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர், வடகிழக்கு மாகாணங்களில் சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ.,க்களாக பணியாற்ற உள்ளனர்.இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், ஐ.ஜி., அஜய் பரதன் பேசியதாவது:நாட்டுக்காக ஏற்கனவே நீங்கள் முழுமையான அளவில், உங்களுடைய பணிகளை ஆற்றியுள்ளீர்கள். அதே உத்வேகத்துடன், மீண்டும் பணியாற்ற உங்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் பணியாற்றினாலும், அங்குள்ள மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.அனைத்து துறைகளிலும், உங்களுடைய நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக உங்களுடைய செயல் திறனை மேம்படுத்த வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, தியாக உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பயிற்சியை நிறைவு செய்த எஸ்.ஐ.,க்கள், சி.ஆர்.பி.எப்., கொடி மற்றும் இந்திய தேசியக்கொடி ஆகியவற்றின் பெயரில் நாட்டை காக்க, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை