| ADDED : டிச 28, 2025 05:00 AM
கோவை: கோவை தலைமை தபால் நிலையம், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம், போத்தனுார் மற்றும் கணபதி தபால் நிலையங்களில் உள்ள ஏ.டி.எம்.,களில் சேவைகள் திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது ‛தனி பயனாக்கப்பட்ட அட்டைகள்' பெற, சேமிப்பு கணக்குதாரர்கள் தபால் அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். சேமிப்பு கணக்குதாரர்கள், ‛மொபைல் பேங்கிங்' ‛இன்டர்நெட் பேங்கிங்' மற்றும் கணக்குகளில் ஆதார் எண்ணுடன் இணைத்தல் ஆகிய இதர சேவைகளையும், தபால் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம். கோவை தபால் கோட்டத்தில் உள்ள இரண்டு தலைமை தபால் அலுவலகங்களும், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை இயங்கி வருகிறது. வேலை நேரங்களில் தபால் துறையின் சேமிப்பு கணக்குகள், ஆதார், பார்சல், இந்தியா போஸ்ட் பேமென்் வங்கி, தபால் காப்பீடு மற்றும் இதர பல சேவைகளை பொதுமக்கள், தபால் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.