உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை: கோவை பொன்னையாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 35. அப்பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன், விளையாடிக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை, தனது கேட்டரிங் மையத்துக்கு அழைத்து சென்று,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் தனது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அசோக்குமாரை சிறையில் அடைத்தனர்.* கோவை அரசு மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவுக்காக, 15 வயது சிறுமி ஒருவர் வந்தார். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதைடாக்டர்கள் அறிந்தனர். கிழக்கு மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் சிறுமியை,கோவை சிட்ரா பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 22 திருமணம் செய்வதாக கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஸ்ரீதரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ