உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சக்தி மசாலா நிறுவனர் பிறந்தநாள் விழா

 சக்தி மசாலா நிறுவனர் பிறந்தநாள் விழா

கோவை: ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர்கள் துரைசாமி, சாந்தி ஆகியோர், சக்தி மசாலா நிறுவனத்தின் மூலம் கிராமப்புற பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நிறுவனர் துரைசாமியின் 75வது வயதையொட்டி, அவருக்கு பவள விழா பிறந்த நாள் விழா, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மாளிகையில் நடந்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்ரமண்ய சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பு ஹோமங்கள், யாக பூஜைகள்செய்யப்பட்டது. விழாவில் திண்டல் பாரதி வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராமகிருஷ்ணன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். விழாவில், துரைசாமி மகள் சக்திதேவி, மருமகன் இளங்கோ, மகன் செந்தில்குமார், மருமகள் தீபா, பேத்திகள் சுவாதி, சுருதி, பேரன்கள் செங்கதிர்வேலன், மைத்துனர் வேணுகோபால், கவுசல்யா ஆகியோர் பங்கேற்று ஆசிபெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ