மேலும் செய்திகள்
பழுதடைந்த எரிவாயு தகனக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை
31-Jul-2025
மேட்டுப்பாளையம்; பொதுமக்கள் நலன் கருதி மேட்டுப்பாளையம் சாந்திவனம் எரிவாயு தகனக்கூட பராமரிப்பு பணிகள், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் வழக்கம்போல் கிரிமிட்டோரியும் செயல்படும் என, நகராட்சி கமிஷனர் அமுதா அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், கோவிந்தம் பிள்ளை மயானத்தில், நகராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எரிவாயு தகனக்கூடம் (கிரிமிட்டோரியம்) உள்ளது. இதை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர், நிர்வாகம் செய்து வருகின்றனர். சாந்திவனம் எரிவாயு தகனக் கூடத்தில் பராமரிப்பு பணிகளுக்காக, இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை, தற்காலிகமாக செயல்படாது என, நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதியும், பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகளை ஏற்று, பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே வழக்கம் போல சாந்தி வனம் செயல்படும். பராமரிப்பு பணிகள் குறித்த தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் அமுதா மற்றும் ரோட்டரி சங்கத்தினர் அறிக்கையில் கூறியுள்ளனர்.
31-Jul-2025