மேலும் செய்திகள்
கோவையில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்
10-Jun-2025
மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், சஷ்டி பூஜை நடந்தது. சிறுமுகை எலகம்பாளையத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாதம் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, முருக பெருமானுக்கு, 16 வகை வாசனை திரவியங்களில், அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, பூஜை செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Jun-2025