உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

மேட்டுப்பாளையம்: கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழில் உரிமம் பெற்று, தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் அமுதா அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழில் உரிமம் பெற்று வியாபாரம் மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும். ஏற்கனவே தொழில் உரிமம் பெற்றவர்கள், உரிமத்தினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உரிமம் புதுப்பிக்க அல்லது பெறுவதற்கு, https://tnurbanesava.tn.gov என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதார பிரிவு அலுவலர்களை அணுகி, தொழில் உரிமம் பெறலாம். தொழில் உரிமம் இல்லாமல் வியாபாரம் மேற்கொண்டால், மறு அறிவிப்பின்றி சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும். அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 2023 நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, தமிழில் பெயர் பலகை வைத்தல் கட்டாயம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை மற்றும் வணிக நிறுவனங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி