உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டுப்புழு வளர்க்க பயிற்சி

பட்டுப்புழு வளர்க்க பயிற்சி

கோவை: வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் தொடர்பான 20 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஓடந்துரை ஊராட்சி, ஊமப்பாளையத்தில் நடந்தது. துவக்கவிழாவில், வனக்கல்லூரி டீன் நிகார் ரஞ்சன், இப்பயிற்சியின் முக்கியத்துவம், பட்டுக்கூடுகளைக் கொண்டு பல்வேறு விதமான உயர் மதிப்புடைய கைவினைப் பொருட்கள் செய்வது உள்ளிட்டவை குறித்து விளக்கினார். பட்டுப்புழுவியல் துறைத் தலைவர் முருகேஷ், மல்பெரி சாகுபடி, மல்பெரி பழத்தில் மதிப்புக்கூட்டல் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில், படித்த வேலையில்லா, ஊரகப்பகுதி பெண்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ