உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை வெயிலுக்கு பயணியருக்கு ெஷட் தேவை; சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கோடை வெயிலுக்கு பயணியருக்கு ெஷட் தேவை; சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பழநி, திருப்பூர் பஸ்கள் நிறுத்தம் அருகே, பயணியர் காத்திருப்பு பகுதி கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பின் அங்கு தற்காலிக 'ெஷட்' கூட அமைக்காததால், பயணியர் வெயிலில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, கோவை, பழநி, திருப்பூர் மற்றும் புளியம்பட்டி, நெகமம் உள்ளிட்ட வழித்தட பஸ்கள் வந்து செல்கின்றன. கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணியர் பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர்.இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை மீது மழைநீர் தேங்கியதால், சுவர் உறுதியிழந்து கடந்த, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் புளியம்பட்டி பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பகுதியில் கான்கிரீட் சுவர் பெயர்ந்து, அங்கு பஸ்சுக்காக நின்ற மாணவியின் தலையில் விழுந்தது.இதையடுத்து, மழைக்காலங்களில் உள்ளே பயணியர் செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்தாண்டு பிப்., மாதம் பராமரிப்பில்லாத கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பின், புதிய கட்டடம் கட்டப்படும் என பயணியர் எதிர்பார்த்தனர்.ஆனால், கோவை ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் நடைபெறுவதால் இங்கு மீண்டும் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை நகராட்சி மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.இதனால், பயணியர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழையில் நனைந்தும், வெயிலில் சிரமத்துடன் காத்திருக்கும் சூழல் உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கோடை வெயில் அதிகரித்துள்ள சூழலில், பஸ் பயணத்துக்காக வரும் மக்கள், நிழல் தேடி நிற்கும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் முன்பும், எதிரே உள்ள கோவை பஸ்கள் நிறுத்தப்பகுதி அருகேயும் நிற்கின்றனர்.பஸ் வந்ததும் இடம் பிடிக்க ஓடி வரும் நிலை காணப்படுகிறது. ஒரு சிலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிற்பதால், உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். மாற்றுத்திறனாளிகள், அங்கு நிறுத்தப்படும் பஸ்சின் நிழலில் நிற்கின்றனர்.கோடை வெயில் அதிகரித்துள்ள சூழலில், பஸ் ஸ்டாண்டில் பயணியர் வசதிக்காக, தற்காலிக, 'ெஷட்' அமைத்து கொடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பஸ் ஸ்டாண்டில் இடிந்த, கட்டடத்தை புதுப்பிக்க, 15 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில், அதற்கான பணிகள் துவங்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை