உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் மின் இணைப்பு; இன்று சிறப்பு முகாம்

சோலார் மின் இணைப்பு; இன்று சிறப்பு முகாம்

கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும், பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், சோலார் மின் இணைப்பு பெறுவது குறித்த சிறப்பு முகாம், பீளமேட்டில் இன்று நடக்கிறது. பீளமேடு, பாரதி நகர், ஓட்டல் ஹரிபவன் அருகில், இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் முகாமில், சோலார் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்று, மின் நுகர்வோருக்கு, சோலார் மின் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். இத்தகவலை செயற்பொறியாளர் (நகரியம்), பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை