உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொப்பம்பட்டி பிரிவு சிக்னல் பிரச்னைக்கு தீர்வு

 தொப்பம்பட்டி பிரிவு சிக்னல் பிரச்னைக்கு தீர்வு

பெ.நா.பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவில் போக்குவரத்தை சீர்படுத்த, புதிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவு மற்றும் அதை சுற்றியுள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் மற்றும் சித்ரா நகர், மாருதி நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வணிக நிறுவனங்கள் அதிக அளவு உள்ளதால், எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும். இங்கே ஏற்கனவே செயல்பட்டு வந்த போக்குவரத்து சிக்னலில் பழுது ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக செயல்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. இதை தடுக்க இப்பகுதியில் புதியதாக போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, துவக்கி வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கார்த்தி கூறுகையில், உயிர் அமைப்பு மற்றும் பர்ஸ்ட் ஸ்கூல் நிதி உதவியுடன் தொப்பம்பட்டி பிரிவில் நான்கு இடங்களில் டைமர்களுடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார். போக்குவரத்து சிக்னல் துவக்க விழா நிகழ்ச்சியில், துடியலூர் போலீசார் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ