உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு போட்டிகளில் வென்ற போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

விளையாட்டு போட்டிகளில் வென்ற போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

கோவை; விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்று வந்த போலீசாரை, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார்.போலீஸ் துறையில் பணியாற்றும் பல போலீசார், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். அதில், கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மங்களா விளையாட்டு அரங்கில் நடந்த முதல் தெற்காசிய மூத்தோர் தடகளப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற, பொள்ளாச்சி தாலுகா போலீல் ஏட்டு கோவிந்தராஜ் 100மீ., 200மீ., 400மீ., மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில், தங்கம் வென்று அசத்தினார்.இதேபோல், கிணத்துக்கடவு, பீளமேடு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில், நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், மேற்கு மண்டல போலீஸ் அணி முதலிடம் பிடித்தது.தமிழ்நாடு விளையாட்டு பல்கலை., சார்பில் சென்னையில் நடந்த இந்திய முதுநிலை விளையாட்டு சாம்பியன்ஷிப்-2025க்கான இறகுபந்து போட்டியில், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர், பெண்கள் ஒற்றையர் பிரிவில், கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர், அமுதா, பெண் தலைமை காவலர் புவனேஸ்வரி ஆகியோர், வெண்கலப் பதக்கம் வென்றனர்.மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில், திறமையாக விளையாடி பதக்கம் வென்ற, போலீசாரை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை