மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை: பொள்ளாச்சி
11 minutes ago
ராமபிரான் கோவிலில் நாளை ஆண்டு விழா
12 minutes ago
பள்ளியில் உணவுத்திருவிழா
15 minutes ago
பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றியம், கோடங்கிப்பட்டி கிராமத்தில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமில், சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள கிராமங்களில், கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகள் பராமரிப்பு வழிகாட்டுதல் வேண்டி, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை ஒன்றியம் கோடங்கிப்பட்டி கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு, தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கள் சுமதி, ஜீவானந்தம், உதவியாளர் முத்துராம் உள்ளடக்கிய குழுவினர் கால்நடைகளில் நோய் பாதிப்பை கண்டறிந்தனர். மேலும், மலட்டுத்தன்மை நீக்கம், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சுண்டுவாதம், தடுப்பூசி போடுதல் என, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. தாது உப்பு கலவை வழங்கி, சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
11 minutes ago
12 minutes ago
15 minutes ago